| காவின் பல் வண்டு இமிரும், நனி சேய்த்தன்று, அவன் பழ விறல் மூதூர் பொருந்தாத் தெவ்வர் இருந் தலை துமியப் பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர் கருங் கடை எஃகம் சாத்திய புதவின், அருங் கடி வாயில் அயிராது புகுமின்: மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர், 'வெல் போர்ச் சேஎய்ப் பெரு விறல் உள்ளி வந்தோர் மன்ற, அளியர் தாம்' என, கண்டோர் எல்லாம், அமர்ந்து, இனிதின் நோக்கி, விருந்து இறை அவர் அவர் எதிர் கொளக் குறுகிப் பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட எரி கான்றன்ன பூஞ் சினை மராஅத்துத் தொழுதி போக வலிந்து அகப்பட்ட மட நடை ஆமான், கயமுனிக் குழவி, ஊமை எண்கின் குடாஅடிக் குருளை, மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந்தாள் வரை |