| பிடவமொடு மைம் புதல் எருக்கி, வேட்டுப் புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடு முள் புரிசை ஏமுற வளைஇப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி உவலைக் கூரை ஒழுகிய தெருவில், கவலை முற்றம் காவல் நின்ற தேம் படு கவுள சிறு கண் யானை ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த, வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து, அயில் நுனை மருப்பில் தம் கையிடைக் கொண்டெனக் கவை முள் கருவியின், வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர், கவளம் கைப்பக் கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றிக் கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் பூந் தலை குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக, வேறு பகல் பெரும் படை நாப்பண், வேறு ஓர், நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு, குறுந் தொடி முன்கைக் கூந்தல் அம் சிறு புறத்து, இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரிக் கச்சிற் பூண்ட, மங்கையர் நெய் உமிழ் கரையர் நெடுந் திரி கொளீஇக் கை அமை |