| பரூஉக் கை துமியத் தேம் பாய் கண்ணி நல் வலந் திருத்திச் சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலிற், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல், நகை தாழ் கண்ணி நல் வலந் திருத்தி, அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து, நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புரம்பொடு, நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும், மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும், ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து, பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து, முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின வென்று, பிறர் வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, விசய, வெல் கொடி உயரி, வலன் நேர்பு, |