| காயா அஞ்சனம் மலர, முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக், கோடல் குவி முகை அங்கை அவிழத் தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செந் நிலப் பெரு வழி, வானம் வாய்ந்த வாங்கு கதிர் வரகின், திரி மருப்பு இரலையொடு மட மான் உகள, எதிர் செல் வெண் மழை பொழியுந் திங்களின், முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழியத் துனை பரி துரக்கும் செலவினர் வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே. |