நெடுநல்வாடை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   199
Zoom In NormalZoom Out

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க் கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப, மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூப்
பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலரப்
பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி,
இருங் களி பரந்த ஈர வெண் மணல்,
செவ் வரி நாரையொடு, எவ் வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த