| வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க; முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை, நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு, தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற; நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக் குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க மாடம் ஓங்கிய மல்லல் மூதூர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து, இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள், மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல், பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண், மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின், பைங் |