| புடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு, உள்ளி நோன் முதல் பொருந்தி, அடி அமைத்து, பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் மடை மாண் நுண் இழை பொலியத் தொடை மாண்டு, முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்து புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத் தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து, ஊட்டுறு பல் மயிர் விரைஇய வய மான் வேட்டம் பொறித்து, வியன்கண் கானத்து முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி இணை அணை மேம்படப் பாய், அணை இட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு அமை தூ மடி விரித்த சேக்கை, ஆரம் தாங்கிய |