| நல் அடி வருட; நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி, 'இன்னே வருகுவர் இன் துணையோர்' என, உகந்தவை மொழியவும் ஒல்லாள், மிகக் கலுழ்ந்து நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால், ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்திப் புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத் திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய, உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா, மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி, செவ் விரல் கடைக் கண் சேர்த்திச் சில தெறியாப் புலம் |