நெடுநல்வாடை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   209
Zoom In NormalZoom Out

தெருவின் எறிதுளி விதிர்ப்பப்
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால்யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப,
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
 
 
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கிப்
பகையோடு பாசறை உளான்.