| சிறுதேர் முன் வழி விலக்கும் விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாக் கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும் கழி சூழ் படப்பைக் கலி யாணர்ப், பொழில் புறவின் பூந்தண்டலை, மழை நீங்கிய மா விசும்பின் மதி சேர்ந்த மக வெண் மீன் உரு கெழு திறல் உயர் கோட்டத்து, முருகு அமர் பூ முரண் கிடக்கை வரி அணி சுடர், வான் பொய்கை, இரு காமத்து இணை ஏரிப் புலிப் பொறிப் போர்க் கதவின் திருத் துஞ்சும் திண் காப்பின், புகழ் நிலைஇய மொழி வளர அறம் நிலைஇய அகன் அட்டில் சோறு வாக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி, ஏறு பொரச் சேறாகித் தேர் ஓடத் துகள் கெழுமி, நீறு ஆடிய களிறு போல, வேறுபட்ட வினை ஓவத்து |