பட்டினப் பாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   215
Zoom In NormalZoom Out

உரவுத் திரை உழக்கியும்;
பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்;
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை,
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்,
நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கிக்
கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான்,
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூஉ எக்கர்த் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
வேல் ஆழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறை