பட்டினப் பாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   216
Zoom In NormalZoom Out

மிசைக் கூம்பின் நசைக் கொடியும்;
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றின்,
மணல் குவைஇ, மலர் சிதறிப்,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு;
பிற பிறவும் நனி விரைஇப்,
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,
காலின் வந்த கருங் கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி,
கிளை கலித்துப்