| கூட்டுள் வளர்ந்தாங்கு, பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி; அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று, பெருங் கை யானை பிடி புக்காங்கு, நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து, உரு கெழு தாயம் ஊழின் எய்தி பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர் கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின், முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள், உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை, வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ, பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப, தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு, வேறு பல் பூளையொடு உழிஞை சூடி, பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம் மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க, முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி, தலை தவச் சென்று பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல் தண்பணைஎடுப்பி, வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி, கராஅம் கலித்த கண் அகன் பொய்கை, கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி, செறுவும் |