| பால் ஆர் செழு நகர், தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ, கொடு வில் எயினர் கொள்ளை உண்ட உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து, வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்; அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய, பெரு பாழ் செய்தும் அமையான் மருங்கு அற மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே; வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன்' என, தான் முன்னிய துறைபோகலின், பல் ஒளியர் பணிபு ஒடுங்க, தொல் அருவாளர் தொழில் கேட்ப, வடவர் வாட, குடவர் கூம்ப, தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர் மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள், மாத் தானை மற மொய்ம்பின், செங் கண்ணால் செயிர்த்து நோக்கி, புன் பொதுவர் வழி பொன்ற, இருங்கோ வேள் மருங்கு சாய காடு கொன்று நாடு ஆக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி, பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி, கோயிலொடு குடி நிறீஇ, |