பெரும்பாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   221
Zoom In NormalZoom Out

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வைச்
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்ப்
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை;
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்;
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
தொடை அமை கேள்வி இ்ட வயின் தழீஇ,
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி