| அறை வாய்ச் சகடம் வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக் கோழி சேக்கும் கூடுடைப் புதவின், முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி, நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்துக் காடி வைத்த கலனுடை மூக்கின் மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக் கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச் சில் பத உணவின் கொள்ளை சாற்றிப் பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள் அடி புதை அரணம் எய்திப் படம் புக்குப் பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள், வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடைக் கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள், கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, உடம்பிடித் தடக் கை ஓடா |