| இசைக்கும், விரல் எறி, குறிஞ்சிப் பல்காற் பறவை கிளை செத்து, ஓர்க்கும் புல் ஆர் வியன் புலன் போகி முள் உடுத்து எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில், களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்க் குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில், பருவ வானத்துப் பா மழை கடுப்பக் கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர் நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன, குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப் புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன, அவரை வான் புழுக்கு அட்டிப் பயில்வுற்று, இன் சுவை மூரல் பெறுகுவிர். ஞாங்கர்க் குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர் நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப் பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றித் தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை அரி புகு பொழுதின், இரியல் போகி, வண்ணக் கடம்பின் |