பெரும்பாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   230
Zoom In NormalZoom Out

முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம்,
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின்
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றிக்
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்,
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள் தப,
வையும் துரும்பும் நீக்கிப் பைது அறக்
குட காற்று எறிந்த குப்பை, வட பால்
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கைப்
பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்,
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,
குமரி மூத்த