| புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச் செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் மை இருங் குட்டத்து மகவொடு வழங்கிக் கோடை நீடினும் குறைபடல் அறியாத் தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் அவையா அரிசி அம் களித் துழவை மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப் பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம் புற நல் அடை அளைஇத் தேம் பட எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி, வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த, வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி, தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர். பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல், கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்பப் பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் நீத் |