| தலை உலகத்துள்ளும் பலர் தொழ, விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ்வாய் அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப, வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப, ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவியப் பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர் ஆராச் செருவின் ஐவர் போல, அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக் கச்சியோனே, கை வண் தோன்றல், நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய அளியும் தெறலும் எளிய ஆகலின், மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட, நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப, நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும், கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்குப் பல் வேறு வகையின் பணிந்த மன்னர் இமையவர் |