| பொலியப் பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய; நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல் வளை கண்டன்ன வால் உளைப் புரவி, துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி, அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ, அன்றே விடுக்கும் அவன் பரிசில், இன் சீர்க் கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல், மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின், மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில், செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக் களிறு தரு விறகின் வேட்டும், ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. |