| குறங்கு என, மால் வரை ஒழுகிய வாழை: வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி, நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சிக் களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து, யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என, குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி கல்லா இளையர் மெல்லத் தைவரப் பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க, இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத், துனி கூர் எவ்வமொடு துயர் |