சிறுபாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   246
Zoom In NormalZoom Out

ஒன்னார்
ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று,
வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நன் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கைக் காரியும்; நிழல் திகழ்
நீல, நாகம் நல்கிய,