சிறுபாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   248
Zoom In NormalZoom Out

தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொன் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும்,
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்,
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடிப்
பிடிக் கணம் சிதறும் பெயன் மழைத் தடக் கைப்
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
 
 
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும், பாடி,
முன் னாள் சென்றனம் ஆக இந் நாள்,
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது கவர்க் கணச் சிதல் அரித்த,
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்,
வளைக் கைக் கிணை மகள் வள் உகிர்க் குறைத்த