சிறுபாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   250
Zoom In NormalZoom Out

விரை மர விறகின்
கரும் புகைச் செந் தீ மாட்டிப் பெருந் தோள்,
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து,
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,
தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்!
பைந் நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும்,
கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்,
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்,
விடர் கால் அருவி வியல் மலை மூழ்கிச்
சுடர் கான்மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு,
தேமா மேனிச் சில் வளை