இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2
Zoom In NormalZoom Out

ஊரும் பேரும் உருவும் இல்லான்
ஆயினும் திருவா வடுதுறை ஊர்அணைந்து
அம்பல வாணன் எனும்பெயர் ஆதரித்து
அறிவே உருவாய் அமர்ந்தகுரு ராயனைப்
பொறையுடல் போகப் புகழ்ந்துஅடி போற்றுவாம்.
 
 வடமொழிப் போதகாசிரியர் வணக்கம்
 
4.செப்பறைப் பதியில் வாழ்சிவத் துவிசன்
கனக சபாபதி கருதுவட நூற்கடல்
தபோதனர் புகழும் சைவாதி ராசன்
உபய பதங்களை உண்மையொடு பணிவாம்.
 
 தமிழ்ப் போதகாசிரியர் வணக்கம்
 
5. திருநெல்வேலி எனும்சிவ புரத்தன்
தாண்டவ மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல்
வாழ்மயி லேறும் பெருமாள் மகிபதி
இருபத கமலம் என்தலை மேற்கொண்டு
இலக்கணக் கொத்துஎனும் நூல்இயம் புவனே.
 
 இந்நூலின் தோற்றம் பற்றிய விளக்கமும்

அவையடக்கமும்
 

6. பத்தொடு ஒன்பது பாடை நூல்களுள்
மாறு படுதல் வழக்கே அன்றியும்
ஒவ்வொரு பாடையின் உள்ளே ஓரின்
பலநூல் மாறுபடுமே அன்றியும்
ஒவ்வொரு நூற்கடல் உள்ளே ஓரின,
எழுத்துச் சொல்பொருள் யாப்புஅணி ஐந்தனுள்
ஒன்றனை ஒன்றே ஒழிக்கும் அன்றியும்
ஓர்அதி காரத்து உள்ளே ஓரின்
ஓர்இயல் விதியினை ஓர்இயல் ஒழிக்கும்,
ஓர்இயல் அதனின் உள்ளே ஓரின்
ஒருசூத் திரவிதி ஒருசூத் திரவிதி,
தனனைத் தடுத்துத் தள்ளும் அன்றியும்
ஒருசூத் திரத்தின் உள்ளே ஓரின்
ஒருவிதி அதனை ஒருவிதி ஒழிக்கும்
நூல்ஆ சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொர்ஆ சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே!
அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத்து அறியாது அவர்அவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே