இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   7
Zoom In NormalZoom Out


 
சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக
விதிகளில் சிலசில வெளிப்படா ஆயின்
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க
தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக
சிலநாள் பழகின் சிலவும் பலியா
பலநாள் பழகின் பலிக்கும் என்க
விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கதுகாது என்க
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக
நுலினை மீளவும் நோக்க வேண்டா
சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக
மாரிபோல் கொடுப்பினும் மந்தனைவிட்டுக்
கூரிய னுடனே கொத்தும் பழகுக
வேறுஒரு கருமத் தினைமனத்து எண்ணின்
ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக
சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்
அப்படி ஒழுகி, அரும்பொருள் பெறுக.
 
 நூல் கற்றற்குரிய கருவிகள்

பற்றிய புறனடை
 

9. இத்துணைச் சிறப்பில ஆகிய கருவிகள்
இன்னும் பலவே, சொல்லத் தொலையா
அன்றியும் பலநூல் அறைந்தன சிலசில
ஆகையால் இங்ஙனம் அடங்குதல் அழகே.
 
நல்லோர்க்கும் அல்லோர்க்கும் இந்நூல்

நண்ணின் நிகருவன.
 

10. நல்லோர் அல்லோர்க்கு இந்நூல் நண்ணின்,
என்னினும் கடையார் உயர்ந்தார் இலர்என்று
இறுமாப்பு இன்றிஏற்று இகழாது இகழ்ந்து,
நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம்
உரையாரைப் பணிந்து பணியாது ஒழுகிப்
பழிபா வங்களைப் பயந்து தேடிப்
புண்ணியம் புகழ்களைப் போற்றிப் போக்கிப்
பிறப்புஇறப் புக்களில் பிழைத்துப் பிழைத்துப்
பசுவினைப் பாம்பினை இரைஅருத் தினர்க்குப்
பயன்கொடுப் பதுபோல் பயன்கொடுத் திடுவார்
ஆகையா னல்லோர்க்கு அளிக்குதல் அழகே.
 
 இந்நூலியற்றியதன் காரணமும் இதற்கு

அதிகாரிகளும்

11.முற்கா லத்துப் போதகா சிரியர்
மொழிகுவர் மறையார் அருமையாம் விதிகளை
வழிவழி நின்று வழங்கற் பொருட்டே
இக்கா லத்தார் என்பயன் நினைந்தோ