இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   8
Zoom In NormalZoom Out

இசையார் தாமும், இசையார் பூமியில்;
இங்ஙனம் ஆதலின் இறக்கும்என்றுஎண்ணி
அவைகளைத் திரட்டி அமைத்தனன் அன்றி
நூல்இலை என்று நுவன்றனன் அன்றே;
ஆகையால் பலநூல் ஆய்ந்தார் நோக்குக
ஏனையோர் நோக்கின்ஓர் எள்அளவு ஆயினும்
பயன்படல் இலையே பலியாது இடமே.
 
 இந்நூல் எடுத்துக்காட்டுப்

பற்றிய செய்தி
 

12. இந்நூற்கு உதாரணம் தொன்னூல் செய்யுளுள்
சிலவே எழுதினம்; பலவே எழுதினம்
உலக வழக்கினுள் உணரும் பொருட்டே.
   
வேற்றுமையியல்

வேற்றுமையது தொகை
 

13.வினைமுதல் வினையே செயப்படு பொருளே
கருவி கொள்வோன் நீக்கம் குறையே
இடம்என எட்டும் வடமொழி வேற்றுமை
ஏழ்ஆறு என்று இயம்பும் தமிழ்நூல்.
 
காரகம் என்பதன் இலக்கணம்
 
14.விளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்
வினையான் முடியின் காரகம் எனப்பெறும்
குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.
 
காரகத்திற்கு எடுத்துக்காட்டு
 
15. நாரா யணப்பூ ஓரா யிரத்தைக்
கரத்தால் கொய்துஓர் அரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்
பாற்கடல் கண்ணே பள்ளிகொண் டான்எனக்
காரகம் முழுதும் வந்தன காண்க
இவற்றினுள் ஒன்றே இயம்பினும் காரகம்.
 
வேற்றுமை உருபின் மூவகை
16.உருபுவேறு உருபு சொல்உருபு என்ன
வேற்றுமை உருபு மூன்றுஎன விளம்புவர்
 
உருபுகள் நிற்கும் மூவகை நிலை
 
17.அவைதாம்,
உரிமையாய் நிற்றல் ஒப்பாய் நிற்றல்
மாறுபட நிற்றல் எனவழங் குவரே.
 
இடஉருபுக்குச் சிறப்பு விதி
 
18.உருபுவேறு உருபு சொல்லுரு ஆகியும்
உருபினை ஏலாப் பெயரே ஆகியும்
உருபினை ஏற்ற பெயரே ஆகியும்
உருபு தொக்க பெயரே ஆகியும்
இரண்டுஉருபு இணைந்தால் ஒன்றுஉருபுஆகியும்
மாறி நின்றும் வரும்இட உருபே.
  
வேற்றுமை உருபுகள் போல்

வெளிப்படுவன
 

19.வேற்றுமை உருபுகள் அல்லா தனவும்
வேற்றுமை உருபுகள் போல்வெளிப் படுமே.
  
வேற்றுமை என்பதன் மூவகைப்

பொருள்
 

20.உருபுஏற் றதனையும் உருபையும் உருபு
நோக்கிவந் ததனையும் வேற்றுமை என்பர்.
 
பொருள் பற்றிய வேற்றுமையின்

இரு கூறுகள்
 

21.உருபினை ஏற்றசொல் பலபொருள் படுதலும்
உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலும்
எனஇரு கூறாம் வேற்றுமை என்பர்.
 
வேற்றுமையும் உருபும்
 
22.ஒருவேற் றுமைக்குஓர் உருபே வருதலும்
ஒருவேற் றுமைக்குப் பலஉருபு வருதலும்
எனஇரு கூறாய் வரும்உரு புகளே