| ஐ - கு ஒன்றே, அல்லன பலவே.
|
உருபும் பொருளும்
|
|
23. | ஓருரு பிற்கே பலபொருள் வருதலும்
ஒருபொருட் கேபல உருபுகள் வருதலும்
எனஇரண் டாகும் வேற்றுமை இயல்பே,
அவ்விரண் டனையும் முறையே அறைகுவன்.
|
உருபுகள் தோன்றுமிடம்
|
|
24. | பகுபதம் பகாப்பதம் இருவகைத் தொடர்ப்பதம்
வினைமுற் றுப்பெயர் குறிப்புமுற் றுப்பெயர்
தொழிற்பெயர் ஆதியின் தோன்றும்எட்டு உருபே.
|
| எழுவாய் வேற்றுமை உருபு பற்றிய
பல கருத்துகள்
|
| 25. |
எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று;
பெயரே, பயனிலை கொள்ளும் தன்மையே,
பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே,
வினைமுதல் ஆதலே, விகாரப் பெயரே,
பெயர்ப்பின் விகுதி பெறுதலே, ஆயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதல்
ஐம்பால் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே
உருபு என வெவ்வேறு உரைத்தார் பலரே.
|
வினைமுதல் தோன்றும் இடம்
|
|
26. | இருவகைச் செயப்படு பொருளே ஏது
தன்வசம் தெரியா நிலைதடு மாற்றம்
தொழிற்பெயர் ஏழில் தோன்றும் வினைமுதல்;
கருவி இடம்கொள் வானினும் கருதுவர்.
|
இருவினைமுதல் வினை
|
|
27. | இருவினை முதலால் ஒருவினையும் உள
|
மூவகை வினைமுதல்கள்
|
|
28. | ஏவுதல் இயற்றுதல் இவையின்வேறு ஆதல்
எனவினை முதல்மூ வகையாம் என்ப.
|
வினைமுதற்குப் புறநடை
|
|
29. | வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்.
|
விளி வேற்றுமை
|
| 30. |
அழைத்தல் என்றுஒன்று அன்றிவேறு இன்மையின்
விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க. |
செயப்படுபொருள் விரி
|
|
31. | கருத்துண் டாதல், கருத்தின் றாதல்,
இருமையும் ஆதல், ஈருருபு இணைதல்,
கருத்தா ஆதல், அசுநிலை ஆதல்,
தெரிநிலை ஆதியாய் வரும்செயப் படுபொருள்;
இயற்றப்படுதல், எய்தப்படுதல்,
வேறு படுக்கப் படுதல் ஆதியும்,
அவ்வெழு வகையுள் அடங்கும் என்ப.
|
செயப்படுபொருளுக்குப் புறனடை
|
|
32. | செயப்படுப் பொருள்இனும் செப்பின் பெருகும்.
|
கருவியின் வகைகள்
|
| 33. |
அகம்புறம் ஒற்றுமை ஆகும் கருவி.
|
மூன்றனுள் கருதப்படுவன
|
|
34. | முதல்துணை ஞாபகம் காரகம் ஏது
வினையே நிமித்தம் வேற்றுமை வினைமுதல்
காலம் ஆ திகளைஇம் மூன்றனுள் கருதுவர்.
|
|  |