இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   10
Zoom In NormalZoom Out

35.கருவியை இன்னும் கழறின் பெருகும்.
 
கொள்வோனின் வகைகள்
 
36.கேளாது ஏற்றல் கேட்டே ஏற்றல்
ஏலாது ஏற்றல் ஈவோன் ஏற்றல்
உயர்ந்தோன் ஏற்றல் இழிந்தோன் ஏற்றல்
ஒப்போன் ஏற்றல் உணர்வுஇன்று ஏற்றல்
விருப்பாய் ஏற்றல் வெறுப்பாய் ஏற்றல்
ஆதியாப் பலவும் அறைந்தனர் கொள்வோன்.
 
கொள்வோனது புறனடை
 
37.கொள்வோனை இன்னும் கூறின் பெருகும்.
 
நீக்கத்தின் வகைகள்
 
38. நிலைத்திணை இயங்கு திணைபண்பு ஆதியின்
நீக்கம் வருமென நிகழ்த்தினர் புலவர்.
 
நீக்கத்திற்குப் புறனடை
 
39. நீக்கம் இன்னும் நினைக்கின் பெரும்.
 
குறை என்பதன் வகைகள்
 
40. ஒற்றுமை வேற்றுமை உரைக்கப் படும்குறை
ஒற்றுமை ஆவதுஓர் பொருளே யாகும்;
ஒன்றாய்த் தோன்றல் உரிமையாய்த் தோன்றல்
வேறாய்த் தோன்றல் எனவேற் றுமையாம்.
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் சினைகுணம் தொழில்என
ஓர்அறு வகையாம் ஒன்றாய்த் தோன்றல்
பொருள் இடம் காலம் இருவகை நூல்என
உரிமையாய்த் தோன்றல் உரைக்கப் படுமே
வேறாய்த் தோன்றல் வேறுஇடத் தும்செலும்
நிலைமையில் உடைமைகள் பலவும் ஆகும்.
 
குறைக்குப் புறனடை
41.குறையை இன்னும் கூறின் பெருகும்
 
இடத்தின் வகைகள்
 
42. உரிமை இருவகை ஓரிடம் எங்கும்
எனநான்கு என்றே இயம்புவர் இடனே;
காலம் திக்குஆ காயம் வெயில்இருள்
நிலம்அரு உருமுதல் நிகழ்த்தப்படும் இடம்;
கூட்டிப் பிரித்தல் பிரித்துக் கூட்டல்
இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்
எனமூ வகைப்படும் இடம்அல் லாஇடம்
இடத்தின் நிகழ்பொருள் இருவகை; அரு, உரு.
 
இடத்திற்கு புறனடை
 
43. இடத்தின் இலக்கணம் இன்னும் பலவாம்
 
வினைமுதற்கண் பல உருபுகள் வருதல்
 
44. ஒன்று மூன்று நான்கு ஆறுஎனும் உருபொடு
வருமே வினைமுதல் எனவகுத் தனரே.
 
செயப்படுபொருட்கண் பல உருபுகள்
வருதல்
 
45. எல்லா உருபொடும் செயப்படு பொருள் எழும்.
 
கருவிக்கண் பல உருபுகள் வருதல்
 
46. ஒன்று மூன்று நான்கு ஐந்துஆறு உருபொடு
கருவி வரும்எனக் கருதினர் புலவர்.
கொள்வோன்கண் பல உருபுகள்
வருதல்
 
47. எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே.
 
நீக்கத்தின்கண் பல உருபுகள் வருதல்
 
48. இரண்டு நான்கு ஐந்தொடும் எழுமே நீக்கம்.
 
குறையின்கண் பல உருபுகள் வருதல்
 
49. நான்குஐந்து ஆறுஏ ழொடுகுறை நடக்கும்.
 
இடத்தின்கண் பல உருபுகள் வருதல்
 
50. ஒன்றுஇ ரண்டுநான்கு ஏழொடு இடம்எழும்.