| வினைமுதல் ஆதியா வெவ்வேறு ஆதல்,
எட்டுஉருபு ஏற்றே எண்பொருள் ஆதல்,
செயப்படு பொருள்குன் றாமையும், குன்றலும்
பொதுவும் இடம்குன் றாமையும், ஆதல்
பலபொருட்டு ஒன்றும்ஓர் பொருட்கே பலவும்
ஆதலும், பகாப்பதம் ஆதலும் அன்றி
இயல்பினும் திரிபினும் பகுதிஎன்று ஆதல்
ஆதியாப் பலவே ஆகும் என்ப.
|
தொடர்வினைப் பகுப்புகள்
|
|
67. | தொடர்வினைக் குணமே தொகுக்குங் காலை
முதல்நிலைத் தனிவினைப் பகுதி முன்னர்
விகுதிமுதல் ஐந்தனுள் வேண்டுவ பொருந்தியும்,
அவையினுள் ஒன்றுஅணை யாதே திரிந்தும்,
திணையே பால்இடம் பொழுதுஇவை தீண்டித்
தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சமாய்த் தோன்றிச்
சிறப்புப் பொதுஎனச் சேறலும், அன்றியும்
தன்வினை பிறவினை அவ்விரு வினைப்பொது,
விதிவினை மறைவினை இவைஇரு வினைப்பொது
செய்வினை செயப்பாட்டுவினை இப்பொது,
முதல்வினை சினைவினை இவைஇரு வினைப்பொது
இருவகை எச்சத் தினுக்கும் பொதுவினை,
தெரிநிலை வினையே தெரியா நிலைவினை
வினைக்குறிப்பு அன்றியும் வினாவினைக் குறிப்பு
பொதுச்சிறப் பினுக்கே பொதுவாய் நிற்றல்
வினைபெயர் தமக்கு வேறுஇன்று ஆதல்
முற்றுஈ ரெச்சம் விதிமறை வினைபெயர்
இயல்பா கியசொல் திரிபா கியசொல்
ஒருமொழி பலமொழிக்கு ஒப்பாய் நிற்றல்
ஆதியாப் பலவே ஆகும் என்ப.
|
வினையடிகள்
|
|
68. | பெயர்வினை இடைஉரி நான்குஅடி யானும்
பிறக்கும் வினைஎனப் பேசுவர் புலவர்;
பண்புஅடி முதலாப் பலவும் பகர்வர்;
அவைஇவை யுள்ளே அடங்கும் என்க.
|
வினை வகைகள்
|
| 69. |
முதல்நிலை தொழிற்பெயர் முற்று ஈரெச்சம் என்று
ஐவகை யுள்ளே அடங்கும் வினையே.
|
முதல்நிலை பகுக்க இயலாத்தொழிற்
பெயர்கள்
|
| 70. |
முதல்நிலை இன்றியும் தொழிற்பெயர் மொழிகுவர்.
|
பிறவினை வகை
|
| 71. |
முதல்நிலை திரிந்தும், திரியா தாகியும்,
|
|  |