இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   15
Zoom In NormalZoom Out

வேறுஇல்லை உண்டுயார் வேண்டு தகும்பாடும்
வினைபெயர் எச்சம் வியங்கோள் பத்தும்,
திணைபால் இடம்எலாம் செல்லும் என்ப.
 
வினையியற்குப் புறனடை
 
86.வினைச்சொல் இலக்கணம் விளம்பில்அள வில்லை
ஆயினும் ஐந்தனுள் அறிந்துஅடக் குகவே.
 
ஒழிபியல்
தமிழில் வடமொழி
 
87.பொதுஎழுத்தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைந்தும்மொழி பெயர்த்தும்
பொதுஎழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்தும்,
தமிழ்ச்சிறப்பு எழுத்துஐந் தானும் திரிந்தும்,
மொழிமுதல் இடைகடை எனும்மூன்று இடத்தும்
தோன்றல் முதலா விகாரம் தோன்றியும்
வருமே தமிழில் வடமொழி என்க.
 
தமிழ்ச்சொல் அமைப்பு
 
88.பொதுஎழுத் தானும் சிறப்புஎழுத் தானும்
ஈரெழுத் தானும் இலங்கும் தமிழ்மொழி.
 
மொழி வருவித்து முடித்தல்
 
89. அதிகா ரத்தால் அவாய்நிலை தன்னால்,
ஓர்சொற் பொருளை உறுத்தற் பொருட்டால்,
செய்யுள் விகாரத் தால்சிதைந் ததனால்,
அறுவகைப் பொருளின் அத்தொகை தன்னால்,
இடையில் உள்ளன எல்லாம் மறைதலால்
இன்னும் பலபல ஏதுவி னாலும்
மொழிவரு வித்து முடித்தனர் கொளலே.
 
அளபெடை வகைகள்
 
90. இயற்கை அளபெடை செயற்கை அளபெடை
எழுத்துப்பே றளபெடை இசைநூ லளபெடை
ஒற்றுப்பே றளபெடை ஒரோவழிக் கூடில்
ஐந்தென மொழிப அளபெடை; அவைதாம்
குற்றெழுத் தளபெடை, நெட்டெழுத் தளபெடை
ஒற்றெழுத் தளபெடை எனஒரு மூன்றாய்
மொழிமுதல் இடைகடை மூன்றினம் வருமே.
 
போலி எழுத்து
 
91.போலி எழுத்தைப் போற்றுதல் கடனே.
 
தொகாநிலையின் இன்றியமையாமை
 
92. அறுவகைத் தொகையும் அப்பொருள் படுமே
ஆதலின் உருபு முதலிய அடைந்து,
நின்றுபயன் என்எனின் நிகழ்த்தக் கேள்நீ;
தொக்குழி அப்பொருள், தோன்றியும் வேறோர்
பொருளே தோன்றியும், பலபொருள் தோன்றியும்
வரும்,பின் இரண்டும் மயக்கம் கொடுக்கும்;
அத்தொகை இருவகை வழக்கினும் ஆகா;