| பின்மொழி ஆகு பெயராய்ப் பிறத்தலும்,
முன்மொழி ஆகு பெயராய் முடிதலும்,
இருமொழி ஆகு பெயராய் இருத்தலும்,
ஒருபொருட்கு இருபெயர் ஆகி ஒட்டலும்,
முற்பதம் தமிழ்மொழி முற்பதம் வடமொழி
இருபதம் தமிழ்மொழி இருபதம் வடமொழி
ஆகி வருதலும் ஆதியாப் பலவே.
|
வடமொழியில் பண்புத்தொகை
|
|
99. | சிலபெய ரெச்சமும் சிலவினைத் தொகையும்
இருவகை உவமையும் வண்ணச் சினைச்சொலும்
பண்புத் தொகைஎனப் பகரும் வடநூல்.
|
இன்மை பற்றி வரும் உபசர்க்கம்
|
|
100. | அ. அந். ந. நி. கு. வி. வருமொழி பொருளை
இன்மை பிறிதுமறை யினுள் ஒன்று ஆக்கும்.
|
இன்மையின் ஐவகை
|
| 101. |
அவற்றுள் இன்மை ஐவகை ஆகும்.
|
எழுத்தாற்றல் முதலியன
|
| 102. |
எழுத்து சொல்பொருள் ஆற்றல் மொழிப்பொருட்
காரணம் இவற்றுள் கருதுவ கருதுக.
|
| எழுத்தொற்றுமை |
|
103. | முப்பது எழுத்தும் முறையே ஒற்றுமை
அன்றியும், கசவும் சயவும் வயவும்
மனவும் லளவும் வலவும் அன்றியும்
பின்னும் பலவாம் ஒற்றுமை என்ப.
|
எழுத்துச்சாரியை
|
| 104. |
ஓரெழுத் திற்கே ஒருசா ரியையும்,
ஓரெழுத் திற்கே பலசா ரியையும்,
பலஎழுத் திற்கே ஒருசா ரியையும்,
தொடந்தபல் லெழுத்திற்கு ஒருசா ரியையும்,
சாரியை இன்றித் தனித்தும் தொடர்ந்தும்,
தொடர்பினுள் சாரியை கலந்து தோன்றியும்,
வரும்என மொழிப வழக்கறிந் தோரே.
|
தொடர்மொழியின் புணர்நிலை வகை
|
| 105. |
தகுதி அவாய்நிலை அண்மைநிலை மூன்றும்
புணரப் புணர்வது புணர்ப்பெனப் புகல்வர்.
|
புணர்ச்சியின் நால்வகை
|
|
106. | பொருத்தப் புணர்ச்சி பொருத்தமில் புணர்ச்சி
அவ்விரு வகையும் ஒருங்கியல் புணர்ச்சி
எனமூன்று என்பர் புணர்ச்சி இயல்பே;
வழுவுடைப் புணர்ச்சியை மறாவழி நான்கே.
|
பொருத்தப் புணர்ச்சி
|
|
107. | பொருத்தப் புணர்ச்சியை விரிக்கின் பெருகும்
அன்றியும் யாவரும் அறைந்தனர் என்க.
|
பொருத்தமில் புணர்ச்சி
|
| 108. |
ஆற்றொழுக்கு அடிமறி மாற்றுஇரண்டு அல்லா
எழுவகைப் பொருள்கோள், மரூஉமொழி பொய்யுரை
சிலஇடைப் பிறவரல், பண்பு அதிகாரம்,
ஆதியாம் பதங்கள் அவையும் அன்றி
விகுதியுருபு உம்மை முதலினுள சிலவும்
|
|  |