இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   20
Zoom In NormalZoom Out

தனிமொழி தொடர்மொழி எனும்இரண் டினும்வரும்
தனிமொழி வினைமொழி தனையே சாரும்,
சொல்வேறு படாஅது பொருள்வேறு படுதலும்,
பொருள்வேறு படாஅது சொல்வேறு படுதலும்,
பொருள்சொல் ஒருங்கே போய்வேறு படுதலும்,
எனமூன்று என்பர் தொடர்மொழி இயல்பே.
 
ஓசை நான்கு
  
127. எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை
நலிதல் விலங்கலொடு நான்குஎன் பார்சிலர்
மூன்று எனத் துணிந்தே மொழிகுவர் பலரே.
 
ஒருசாரார் கூற்று
  
128.ஒருபொருட் கேபல வாய்பாடு வருதலும்,
பலபொருட் கேஒரு வாய்பாடு வருதலும்,
உளஎன மொழிப உணர்ந்திசி னேரே.
 
சொற்பொருள் உரைக்க ஏதுக்கள்
  
129.பொருள்அதி காரம் முன்னம் உத்தி
வெளிப்படை குறிப்பே மெய்பாடு அன்மொழி
ஒட்டுஆகு பெயரே உவமை இறைச்சி
உபசாரம் ஆசை உள்மயக்கு ஆதி
ஏதுவாக இயம்புவர் சொற்பொருள்.
 
பிரிவுகள் ஏழு
  
130. உயர்திணை இயற்பெயர் அஃறிணை இயற்பெயர்
உயர்திணைப் பொருளில் சாதி ஒருமை
அஃறிணைப் பொருளில் சாதி ஒருமை
உயர்திணைப் பொருளில் சாதிப் பன்மை
அஃறிணைப் பொருளில் சாதிப் பன்மை
ஒருசொல் நின்றே தனித்தனி உதவுதல்
எனப்பிரிவு ஏழ்என்று இயம்புவர் புலவர்.
 
 நூற்புறனடை 
 
131. இலக்கணம் இலக்கியம் உரைஎனப் பெயர்பட்டு
இருக்கும்என்று எண்ணுக செய்யுளின் இயல்பே.