| இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ,
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவியப்
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக்
கச்சியோனே, கை வண் தோன்றல்,
நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளியஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட,
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும்,
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்குப்
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை,
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப்
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்துப்
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து
|