| அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, இழை அணி பணைத்தோள், ஐயை தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் - கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, வேழ வெண் புணை தழீஇ, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |