| சிலம்பின் ஆங்கண், வழையோடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, நெறிகெட விலங்கிய, நீயிர், இச் சுரம், அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |