அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   17
Zoom In NormalZoom Out


 
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
கன்று புகு மாலை நின்றோள் எய்தி,
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ -
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
 

என்பது   வினைமுற்றி   மீண்ட  தலைமகன்  தேர்ப்பாகன்  கேட்பச்
சொல்லியது. - கல்லாடனார்.
 

 
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறை கூரும் மெல்லம் புலம்ப! -
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினை ஆயின்,