| நன்றும் அரிது உற்றனையால் - பெரும! உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் - கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
| |
|
என்பது இரவுக்குறி
வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும்
தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
|
| வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம், நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, இலை இல மலர்ந்த முகை இல் இலவம் கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம் சுடர் |
|  |