| நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், குறவர் ஊன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் நல் வரை நாட! நீ வரின், மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |