| பொருள்! வயிற்பட மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, கவவு இன்புறாமைக் கழிக - வள வயல், அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த வெண் குருகு நரல, வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே! |