| லங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, 'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து, கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், 'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?' என, யான் தற் கரைய, வந்து விரைவனென் கவைஇ - களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் பேணினன் அல்லெனோ - மகிழ்ந! - வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் மகன் தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே? |