| நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, மராஅ யானை மதம் தப ஒற்றி, உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் - கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து ஈங்கும் வருபவோ? - ஓங்கல் வெற்ப! - ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், பகல் நீ வரினும் புணர்குவை - |