அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32
Zoom In NormalZoom Out


 
உற்ற, இவ் ஊர்,
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடி கொண்டனளே - தோழி! - 'பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
 
 

என்பது   பகற்குறி   வந்த  தலைமகன்  சிறைப்புறத்தானாக,  தோழி
தலைமகட்குச்   சொல்லுவாளாய்,  தலைமகன் கேட்பச் சொல்லியது. -
உலோச்சனார்
 

 
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப்
பல்வேறு வெறுக்கை தருகம் - வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! - புரி இணர்
மெல் அவிழ்