அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   34
Zoom In NormalZoom Out


 
மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
 
 

என்பது   வரைவிடை    வைத்துப்   பிரிந்த   காலத்து,   தலைமகள்
ஆற்றாளாக,  தோழி   தலைமகனை  இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட
மொழிந்தது;    தலைமகன்   இரவுக்குறி   வந்து   சிறைப்புறத்தானாக,
தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
வெறிபாடிய காமக் கண்ணியார்.
 
 

மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி,
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
காடே கம்மென்றன்றே, அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல்