| தேனே; அது கண்டு, 'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், சிறுபுறம் கவையினனாக, உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
|
என்பது தலைமகன்
தோழியை வாயில் வேண்டி, அவளால் தான்
வாயில் பெறாது, ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன்
நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி.
|
| "கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார், நாம் அழ, நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், செல்ப" என்ப' என்போய்! நல்ல மடவை மன்ற நீயே; வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன நகைப் |
|  |