| மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி! கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே அருவி ஆன்ற பைங் கால் தோறும் இருவி தோன்றின பலவே. நீயே, முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி, பரியல் நாயொடு பல் மலைப் படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து, கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி, ஆங்கு ஆங்கு |