| "தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின் வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் மாவின் நறு வடி போல, காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் நினையாது கழிந்த வைகல், எனையதூஉம், வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் தாழக் கூறிய தகைசால் நல் மொழி மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க |