அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   42
Zoom In NormalZoom Out


 
வினவல் ஆனாப் புனைஇழை! - கேள் இனி -
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! 
 

என்பது    வினை    முற்றி   மீண்ட   தலைமகன்,    'எம்மையும்
நினைத்தறிதிரோ?'     என்ற     தலைமகட்குச்    சொல்லியது.  -
வெள்ளாடியனார்.
 

 
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ்வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறை போக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,