அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   44
Zoom In NormalZoom Out


 
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
'சென்றார்' என்பு இலர் - தோழி! - வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. 
 

என்பது 'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு,
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்.
 

 
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர்கொள் தட்டை மதன்